துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இன்று காலை அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்று வரவேற்றார்.
மேலும் தமது இல்லத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியை பூங்கொத்து கொடுத்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்றார். வழிகாட்டுதல் குழுவை சேர்ந்த 11 பேரும் ஓபிஎஸ்சிடம் வாழ்த்து பெறுகின்றனர்.