தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த குற்றங்களைப் பட்டியலிட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
“நாள்தோறும் அங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தப் பதிலும் சொல்வதில்லை. தமிழ்நாட்டின் மகளிருக்கு இழைக்கப்படுகின்ற மன்னிக்க முடியாத துரோகம் இது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இரும்புக் கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்பட வேண்டும்” என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.