தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்திசிரிக்கும் வேளையில், காவல் துறை என்ற ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை தமிழகமக்களை வாட்டி வதைத்து வருவதாக கூறியுள்ள பழனிசாமி, இந்தஆட்சியில் நிர்வாக திறனற்ற காவல்துறையின் அனைத்து அவயங்களும்செயலிழந்து விட்டதைக் கண்டு மக்கள்கொதித்துப் போயிருக்கிறார்கள் எனவும்தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடந்தகுற்றச்சம்பவங்களை பட்டியிலிட்டுள்ள பழனிசாமி, குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல் துறை மீதோஅச்சமே இல்லை என்பதையே காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என கூறிய ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சி, சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.