அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலை 12.30 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 5 அமைச்சர்களும் ஆளுநரை சந்திக்க இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேற்றிரவு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, 124 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்து கடிதம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய முடிவினை ஆளுநர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.