தமிழ்நாடு

“கொரோனா உயிரிழப்புகள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை” - எடப்பாடி பழனிசாமி

webteam

கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட படுக்கைகள் எண்ணிக்கைக்கும், செயலில் உள்ள எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. ஆகவே மாவட்ட ரீதியாக கொரோனா சிகிச்சை படுக்கை எண்ணிக்கையை தெளிவுபடுத்துவதுடன்,கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால் பரிசோதனை மையங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் வெளிப்படைத் தன்மையை கையாள்வதும், அவர்களை அடக்கம் செய்வதில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதுமே கொரோனாவை கட்டுபடுத்த உதவும்,ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் முகாம்கள் அமைத்து போர்கால அடிப்படையில் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுகிறேன்.” எனத் தெரிவித்தார்.