அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலாவை சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 125 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அந்த கூட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதம் ஆளுநர் மாளிகைக்கு பேக்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியமைக்க உரிமை கோருவாருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.