நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், விதி எண் 110ன் கீழ் இன்று அவர் சில அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற முழு சுகாதார தமிழகம் என்ற இலக்கினை அடையும் வகையில், 3ஆயிரத்து 178 கோடி ரூபாய் செலவில் 26 லட்சத்து 49 ஆயிரம் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்படும் என்று தெரிவித்தார். தலா 60 லட்ச ரூபாய் செலவில் 600 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஊராட்சி அளவிலான கட்டமைப்பு கட்டடங்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார். இதுதவிர மேலும் சில அறிவிப்புகளையும் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.