அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக செயல்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதன்பின் மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், வாக்கெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுகவினர் பேரவை வந்ததாகவும், அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திமுக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதே தங்களது குறிக்கோள் எனவும் தெரிவித்தார்.