Vaithilingam PT
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கம்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

PT WEB

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிய விவகாரத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.