தமிழ்நாடு

சேகர் ரெட்டியின் ரூ.34 கோடி சொத்துக்கள் முடக்கம்

webteam

சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.34 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிய குற்றச்சாட்டுகளில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்னர். இந்த புதிய ரூபாய் நோட்டுகளை அவருக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் லோதா கொடுத்து தெரியவந்தது. இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 17 ம் தேதி சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.34 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.