தமிழ்நாடு

குழந்தைகளுடன் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 5 இலங்கை தமிழர்கள்.. நடுக்கடலில் நடந்த பயங்கரம்!!

webteam

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, இலங்கையில் இருந்து வாழ வழியின்றி 170 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தனுஷ்கோடி அடுத்த ஐந்து மணல் தீடையில் ஆறு மாத கைக்குழந்தையுடன் 6 நபர்கள் இரண்டு நாட்களாக பசியும், பட்டினியுமாக தவித்து வந்துள்ளனர். மேலும், ஐந்தாம் மணல் தீடையில் இலங்கையில் இருந்து அகதிகளாக 6 நபர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக அப்பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தகவல் கொடுத்தும் இந்திய கடலோர காவல் படை மற்றும் மரைன் போலீசார் அவர்களை மீட்டு கொண்டுவருவதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே, ஐந்தாம் மணல் தேடியில் தஞ்சம் அடைந்த ஆறு நபர்களை இலங்கை கடற்படை மீட்க வந்துள்ளனர். அப்போது ஐந்து நபர்கள் கடற்படையினரிடம் கெஞ்சியதை அடுத்து விட்டு சென்றதாகவும் அதில் ஒரு நபர் இலங்கை கடற்படைக்கு பயந்து ஓடிய போது துப்பாக்கியால் சுட்டதில் அவர் கடலில் குதித்து மாயமாகியுள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தனுஷ்கோடி பகுதியில் 24 மணி நேரமும் இந்திய கடலோரபடை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.