தமிழ்நாடு

குடிசை வீட்டுக்கு ரூ.58 ஆயிரமா? ஷாக் கொடுத்த மின் கட்டணம்!

webteam

சாயல்குடிப் பகுதியில், குடிசை வீட்டுக்கு மின் கட்டணமாக, 58 ஆயிரம் ரூபாய் வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியிலுள்ள செவல்பட்டி, தரைக்குடி, ராமலிங்கபுரம், கடுகுசந்தை, கன்னிராஜபுரம், சேதுராஜபுரம், கீரந்தை, புல்லந்தை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் கட்டணம் அளவீடு செய்ததில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஒரு குடிசை  வீட்டுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 58 ஆயிரம் வரை கட்டணம் (ரீடிங்) வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடந்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்சாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் சரியான விளக்கம் அளிக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். கூலித் தொழிலாளர்கள் இந்த அளவு கூடுதல் கட்டணத்தை எப்படி செலுத்த முடியும் என மின்வாரியத்திடமும் மற்றும் அதிகாரிகளிடமும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மேலும் கன்னிராஜபுரம் பகுதியை சார்ந்த ராஜமுத்து என்பவருக்கு ரூபாய் 84 ஆயிரம் மின்சார கட்டணமாக வந்ததை அடுத்து, மின்சாரத்துறை அமைச்சர் இந்த விசயத்தில் தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.