தமிழ்நாடு

மழைக்காலத்தை வரவேற்கும் வண்ணத்துப்பூச்சிகள்

மழைக்காலத்தை வரவேற்கும் வண்ணத்துப்பூச்சிகள்

webteam

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வண்ணத்துப்பூச்சி இடப்பெயர்வு தொடங்கியுள்ளது.

காட்டுயானை கூட்டங்களைப்போல் வண்ணத்துப்பூச்சிகளும் ஆண்டுக்கு இருமுறை பருவ சூழலுக்கு ஏற்றார் போல் இடப்பெயர்ச்சி செய்யும். நீலகிரி மலைப்பகுதியில் அதிகளவில் காணப்படும் பலவகையான வண்ணத்துப்பூச்சிகள் அக்டோபர் முதல் பிப்ரவரி ‌வரை கோவை மலைப்பகுதிக்கு இடம்பெயரும். உணவு தேவை மற்றும் இனவிருத்திக்காக இந்த இடப்பெயர்ச்சி  நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தவறாமல் தொடரும் ஒரு இயற்கை சார்ந்த நிகழ்வு. தற்போது அதற்கான சீ‌சன் துவங்கியுள்ளதால் பலவகையான வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள் கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன.