தமிழ்நாடு

ஹெட்போனில் பாடல் கேட்ட பெண் உயிரிழப்பு

ஹெட்போனில் பாடல் கேட்ட பெண் உயிரிழப்பு

webteam

சென்னையில் ஹெட்போனில் பாடல் கேட்ட பெண் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (46).  இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது காதில் ஹெட்போனை மாட்டியவாறே உறங்க சென்றுள்ளார். அடுத்த நாள் காலை இவரது கணவர், பாத்திமாவை எழுப்பியுள்ளார். நீண்டநேரமாகியும் பாத்திமா எழாததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ஹேட்போனில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.