தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை கைவிடலாமா என்பது குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுடனும் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக மாநிலங்கள் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிப்பது மத்திய அரசின் விதிமுறைகளை மீறும் செயல் என உள்துறை செயலாளர் அஜய் பல்லா தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மத்திய அரசின் உத்தரவுப்படி, இ- பாஸ் முறையை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.