தமிழ்நாடு

தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் - தமிழக அரசு

தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் - தமிழக அரசு

Sinekadhara

தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளைமுதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களை அழைத்துவரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என தெரிவித்துள்ளது. எனவே மே 25 முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் இ-பதிவு செய்துகொள்ளவேண்டும் தெரிவித்துள்ளது.

மேலும் தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.