தமிழ்நாடு

ஆளுநரை சந்திக்க மும்பை சென்றார் துரைமுருகன்

ஆளுநரை சந்திக்க மும்பை சென்றார் துரைமுருகன்

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளிப்பதற்காக, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மும்பை புறப்பட்டுச் சென்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க, நாளை 11 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, பணப்பட்டுவாடா புகாருக்குள்ளான அமைச்சர்களை பதவி நீக்குமாறு வலியுறுத்த உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுப்பார்கள் எனவும் கூறப்படுகிறது