புயலால் திருவாரூரில் 8 கி.மீ. தூரத்துக்கு உட்புகுந்த கடல் நீரில் 500 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கி நாசமாகியுள்ளன.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செங்காங்காடு பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் உட்புகுவது அதிகரித்துள்ளது. நேற்றிரவு வேம்பலவன் காட்டைத் தாண்டி 8 கி.மீ. தூரத்துக்கு கடல் நீர் உட்புகுந்தது. மெதுவாக கடல்நீர் வடியத் தொடங்கினாலும், ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே கடல்நீர் பின்வாங்கியது.
மீண்டும் இன்று காலை முதல் கடல்நீர் உட்புகுந்து வரும் நிலையில், சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கடல்நீரை உடனடியாக விளைநிலங்களிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.