சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தற்போது பெய்த கனமழை காரணமாக பெட்ரோல் பங்கு ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்து பலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பெட்ரோல் பங்க் மேற்கூரையானது இடிந்து விழுந்ததில் பெட்ரோல் பங்கில் இருந்த நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்டுப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேற்கூரையை முழுவதுமாக அப்புறப்படுத்தக்கூடிய பணிகள் இரண்டு ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டுவந்து அப்புறப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் 2 பேர் மற்றும் பொதுமக்கள் 4 பேர் விபத்தில் சிக்கினர். 6 பேரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து எலும்பு முறிவு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு மட்டும் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விபத்து குறித்து தீயணைப்புத் துறை மற்றும் சைதாப்பேட்டை காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.