tn rain pt
தமிழ்நாடு

கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டுவருகிறது. இந்தசூழலில் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வாக மாறியதால் தமிழகத்தில் கனமழை அதிகரித்துள்ளது. இதனால் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் அக்டோபர் 23ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு மழை தீவிரமடையும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் 23ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும், அது புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அதிகமடையுமே தவிர குறைய வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்தசூழலில் தான் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக அதிக கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக நேற்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி முதலிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.