தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.
தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.