தமிழ்நாடு

டிஎஸ்பிக்கள் அதிரடி இடமாற்றம்

webteam

தமிழகத்தில் 27 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் 27 டிஎஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஜிபி ராஜேந்திரன் இந்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி நாராயணன், சாத்தூர் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி
டிஎஸ்பி பாஸ்கரன், ஓமலூர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரமேஷ், நெல்லை ஆலங்குளம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆலங்குளம் டிஎஸ்பி
சங்கு, ஊட்டி ஊரக பகுதி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் மணி, கோவை சிபிசிஐடி சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி அன்புராஜ், பென்னாகரம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்ட அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி ராமகிருஷ்ணன், திருப்பூர் நகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை சிபிசிஐடி சிறப்பு பிரிவு டிஎஸ்பி தங்கவேல், திருப்பூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் 27 பேர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.