தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு: டி.எஸ்.பி காதர் பாட்ஷா கைது

webteam

சிலை கடத்தல் வழக்கில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த திருவள்ளூர் டி.எஸ்.பி. காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு விவசாய நிலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று ஐம்பொன் சிலைகள் திடீரென காணாமல் போனது. திருவள்ளூர் காவல் துணை ஆய்வாளர் காதர் பாட்ஷாவும், கோயம்பேடு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்புராஜூம் இணைந்து அந்த சிலையைக் கடத்தி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். அவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப் படையினர் கும்பகோணத்தில் அவரை கைது செய்தனர்.