கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மது குடித்துவிட்டு வருபவர்கள் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
குமரி மாவட்டத்தின் குமரிகுற்றாலம் என அழைக்கப்படுகிறது திற்பரப்பு அருவி. இங்கு வருகை தரும் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க, அருவியின் கீழ்ப் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் நீச்சல்குளம் ஒன்றை கட்டியுள்ளது. இதில் பெற்றோர்களுடன் சேர்ந்து குழந்தைகள் நீச்சல் பயிற்சி எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் பெண் குழந்தைகள் நீச்சல் பயிற்சி எடுக்கும் நேரத்தில் சிலர் மது அருந்திவிட்டு வந்து தொல்லைகள் கொடுக்கின்றனர் எனப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்கள் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்வதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் குளிக்காமல் சென்றுவிடுகின்றனர். எனவே குடித்துவிட்டு வருபவர்கள் குளிக்க அனுமதிக்க கூடாது, குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.