தமிழ்நாடு

உச்சக் கட்ட போதை... உணர்வில்லாத நிலை : பேருந்து நிலைய சாக்கடைக்குள் ‘குடி’மகன் !

rajakannan

குமுளி பேருந்து நிலையம் அருகே துர்நாற்றம் வீசும் சாக்கடைக்குள் விழுந்து கிடந்த குடிமகனின் கோலம் காண்போரை முகம் சுழிக்க வைப்பதாய் இருந்தது.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி பேருந்து நிலையம் தற்போது குமுளி அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து அளவுக்கு மீறிய போதையில் வருவோர் அடிக்கடி அப்பகுதியில் விழுந்து கிடப்பது வாடிக்கையாகியுள்ளது.

அந்த வரிசையில் உச்சக்கட்ட மதுபோதையில் பேருந்தில் இருந்து இறங்கிய 45 வயதுடைய மதிக்கத்தக்க நபர் ஒருவர், அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தார். பல மணி நேரமாகியும் எங்கு படுத்திருக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அவர் கிடந்தார்.

பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் கழிவறையாக பயன்படுத்தும் துர்நாற்றம் வீசும் சாக்கடைக்குள்ளேயே புரண்டு புரண்டு கிடந்த குடிமகனின் இந்தக் கோலம் அவ்வழியாக கடந்து போவோரை முகம் சுழிக்க வைத்ததோடு, அளவிற்கு மீறிய போதைப்பழக்கத்தின் நிலை வருத்தமடையவும் வைத்தது.