தமிழ்நாடு

மது அருந்த பணம் தராத மனைவி: அடித்து கொலை செய்த கணவன்

மது அருந்த பணம் தராத மனைவி: அடித்து கொலை செய்த கணவன்

webteam

மது குடிக்க பணம்  தர மறுத்த  மனைவியை கணவனே அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை காசிமேடு  சூர்யா நாராயணன் சாலையைச் சேர்ந்த இளையராஜா, தனது மனைவி நந்தினியிடம் மது குடிக்க பணம் கேட்டு அவர் தராததால் அடித்துக் கீழே தள்ளி விட்டிருக்கிறார். கீழே விழுந்த நந்தினியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைதொடர்ந்து  காசிமேடு போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து  இதயராஜாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

இதயராஜா(27). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். குடிப்பழக்கம் கொண்ட அவர், திருமணம் முடிந்த நாளில் இருந்தே மது அருந்துவிட்டு மனைவியை அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.