தமிழ்நாடு

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!

Rasus

வெங்காய விலையை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், முருங்கை விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.

நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் முருங்கை விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. திருச்சி சந்தையில் முருங்கை வரத்து இல்லாததாலும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் ஒரு கிலோ முருங்கை ரூ.650 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

மதுரை மத்திய காய்கறி மார்கெட்டிற்கு முருங்கை வரத்து இல்லாத காரணத்தால், முருங்கைக் காய் ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 350 வரை விற்பனையாகின்றது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.