தமிழ்நாடு

இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது

இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது

webteam

ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து கடல் அட்டை, உயிர்காக்கும் மருந்துகள் போன்றவை கடத்திச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. கீழக்கரை பகுதி காவல்துறையினரின் அலட்சியப்போக்கு காரணமாகவே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு கியூ பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் இலங்கைக்கு கடத்த முயன்ற 225 பாக்கெட் போதை மாத்திரைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருளன் என்பவரை கைது செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை மற்றும் மருந்து பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.