பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்த டேங்கர் லாரி pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்த டேங்கர் லாரி – ஓட்டுநர் பலி

திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் டேங்கர் லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதில் லாரி பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே கவிழ்ந்ததில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளர்: காளி ராஜன் த

கர்நாடகா மாநிலம் கொண்டலக்கள்ளியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். டேங்கர் லாரி டிரைவராக வேலை செய்து வரும் இவருடன், ஓசூரைச் சேர்ந்த கிரண் என்பவர் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர்கள், பெங்களூருவில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்குச் சென்றுள்ளனர். பின்னர் டீசலை இறக்கிவிட்டு மீண்டும் பெங்களூரு நோக்கி திரும்பியுள்ளனர்.

பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்த டேங்கர் லாரி

அப்போது திண்டுக்கல் - பழனி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து லாரி, மேம்பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு 40அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில், லாரி ஓட்டுநரும் கிளீனரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் சந்திரசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.