தமிழ்நாடு

குடிநீர் குழாய் அமைக்காமல் பணத்தை சுருட்டிவிட்டார்களா? மக்கள் சந்தேகம்!

குடிநீர் குழாய் அமைக்காமல் பணத்தை சுருட்டிவிட்டார்களா? மக்கள் சந்தேகம்!

webteam

கொடைக்கானல் அருகே ஆற்றில் நீர் இருந்தும், குழாயில் நீர் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பரப்பாற்றில் மக்கள் குடிப்பதற்கு தேவையான குடிநீர் உள்ளது. இருப்பினும் ஊரில் உள்ள குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால், எதிலும் குடிநீர் வருவதில்லை. அப்படியே வந்தாலும் கழிவு நீர் கலந்து வருவதாகவும், பூச்சி புழுக்களோடு சுகாதரமற்று வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இதுதொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டபோது, 15 நாட்களில் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக வட்டாட்சியர் கூறியுள்ளார். ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை என மக்கள் குறை கூறுகின்றனர். 

அத்துடன் புதிய குழாய்கள் போடப்பட்டுள்ளதாக கணக்கு எழுதி, பணத்தை ஊழல் செய்துவிட்டார்களோ எனவும் மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். குழாய்களில் தண்ணீர் வராத காரணத்தால், குடிநீருக்காக கிராம மக்கள் பல கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று எடுத்து வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. விரைவில் தங்களின் பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.