தமிழகத்தில் 7 நாட்களாக நடைபெற்று வந்த கேன் குடிநீர் ஆலைகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
உரிமம் பெறாத கேன் குடிநீர் ஆலைகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் குடிநீர் ஆலைகள் போராட்டத்தில் குதித்தனர்.
ஏற்கெனவே உரிமம் பெற்று புதுப்பித்தல் செய்யவில்லை என்றால் கூட உரிமம் ரத்தாகும் என்ற அரசின் கட்டுப்பாட்டில் தளர்வு வேண்டும், நிலத்தடி நீரின் அளவை பொருத்து நீர் எடுக்கும் அளவை தீர்மானிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேன் குடிநீர் ஆலைகள் போராட்டத்தை நடத்தி வந்தது.
கடந்த 7 நாட்களாக தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அனுமதி பெறாத ஆலைகள் விண்ணப்பித்தால் உரிமம் தர 15 நாளில் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கேன் குடிநீர் ஆலைகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.