தமிழ்நாடு

திறந்த வெளியில் மது: குற்றாலத்தில் பயணிகள் புகார்

திறந்த வெளியில் மது: குற்றாலத்தில் பயணிகள் புகார்

Rasus

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையும் மீறி குற்றாலத்தில் பலர் திறந்த வெளியில் மது அருந்துவதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. 

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. ஏராளமான சுற்றுப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். அங்கு
தற்போது ஒரு மதுக்கடை மட்டுமே இயங்குகிறது. மதுக்கடைக்கு அருகில் பல தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளின் பின்புறமுள்ள திறந்தவெளியில் பலர் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் அந்தப் பகுதியை தாண்டிச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகப் புகார் கூறப்படுகிறது. மேலும், குடும்பத்துடன் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள், முகம் சுளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்‌று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.