பல்லாவரம் அருகே குடிப்பதற்கு இடையூறாக இருந்ததாக காவலர்கள் பொருத்திய சிசிடிவி கேமராவை ஒரு கும்பல் உடைத்தது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (22). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கோயில் அருகே உள்ள கிணற்றின் ஓரம் அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக மூன்று புறங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
கேமராக்களில் தாங்கள் மது குடிப்பது தெரிந்துவிடும் என எண்ணிய 5 பேரும், இடையூறாக இருந்த சிசிடிவி கேமராவை உடைத்துள்ளனர். அத்துடன் அதனை கிணற்றிலும் வீசியுள்ளனர். இதை அறிந்த போலீசார், கேமராவை உடைத்த மாதவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுருளி, பவுன், சாலமன், கார்த்திக் ஆகிய நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.