தமிழ்நாடு

நவம்பர் 1-ல் வரைவு வாக்காளர் பட்டியல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

PT WEB

பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி வரும் நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அன்றில் இருந்து நவம்பர் 30ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவோ அல்லது பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் டிசம்பர் 20-ம் தேதி ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி எனப்படும் செல்போன் செயலி போன்றவற்றின் மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.