தமிழ்நாடு

ஆண்டவன் பழனிசாமியை சந்திக்கச் வந்தபோது முதல்வர் பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி – தமிழிசை

ஆண்டவன் பழனிசாமியை சந்திக்கச் வந்தபோது முதல்வர் பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி – தமிழிசை

sharpana

'ஆண்டவன் பழனிசாமியை சந்திக்கச் வந்தபோது முதல்வர் பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி’  என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அடுக்குமொழியில் தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

அரசியல்வாதிகளில் டைமிங்; ரைமிங்கில் அடுக்குமொழியில் பேசி ஆச்சர்யப்படுத்தும் திறமையான பேச்சாளுமைமிக்க அரசியல்வாதி என்று புகழ் பெற்றவர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன். இவரது அடுக்குமொழி பேச்சை எதிர்கட்சியினர் கூட ரசிப்பார்கள். அப்படியொரு ஆற்றல் கொண்டவர்.

இந்நிலையில், இன்று பழனி மலை முருகன் கோயிலுக்குச் செல்ல  மதுரை விமான நிலையம் வந்தபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நிகழ்வை தமிழிசை செளந்தரராஜன் ரைமிங்காக அவரது பாணியிலேயே பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்  “பழனி சென்று ஆண்டவன் பழனிசாமியை தரிசிக்க மதுரை விமான நிலையம் வந்தபோது மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்களை எதிர்பாராத விதமாக சந்தித்தது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் ‘ஆளுநர் ஆனாலும் உங்கள் அடுக்குமொழி குறையவில்லை அக்கா’ என்றும், ’டி.ஆர் வசனம் போல எதுகை மோனையோட இருக்கு’ என்றும் பலர் பாராட்டியிருக்கிறார்கள்.