கரூரில் ஆட்டோமேட்டிக் லாக் கதவால் அறைக்குள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தையை சுமார் அரை மணிநேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன். இவர், தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தை தர்ஷித்துடன் கரூர் காளியப்பனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு தீபாவளி கொண்டாடுவதற்கு வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு தர்ஷித், வீட்டில் உள்ள அறையின் உள்ளே சென்று கதவை வேகமாக சாத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சாத்திய வேகமாக கதவில் இருந்த ஆட்டோமேட்டிக் லாக் தானாக பூட்டிக் கொண்டது.
இதையடுத்து அறையில் சிக்கிய குழந்தையை மீட்க கதவை வெளியிலிருந்து திறக்க முயன்றும் முடியாததால் கரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஜன்னல் வழியாக ஒரு குச்சியைக் கொண்டு ஆட்டோமேட்டிக் லாக்கை ஓபன் செய்து குழந்தையை மீட்டனர்.