திமுக எம்பிக்கள் திருச்சி சிவா மற்றும் கனிமொழி ஆகியோர், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து, தமிழக மக்களின் விருப்பத்துக்கு விரோதமாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அவர்கள் அளித்தனர். பின்னர் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய கனிமொழி, நெடுவாசல் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவே போராடி வருவதாகத் தெரிவித்தார். தமிழக அரசு தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் கனிமொழி தெரிவித்தார்.