தமிழ்நாடு

“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

Rasus

மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊரகப் பகுதி உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க இருந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.