தூங்குவதற்கு குறைந்தது ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஒற்றை தலைவலி மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.
அதேபோல படுக்கைக்குச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்குள் இரவு உணவு, இனிப்பு வகைகள் மற்றும் டீ, காபி குடிக்கக் கூடாது என்றும் இது தூக்கமின்மை பிரச்னையுடன் உடல் பருமனுக்கும் காரணமாகி விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.