வேளாண்மைத் துறையை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வேளாண்மைத் துறையை முழுமையாக மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த், ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளார். மாநிலங்கள் வேளாண்மைத் துறையில் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளைத் தீர்க்க முடியாத மத்திய அரசு, வேளாண் கடன் தள்ளுபடி என்பது மாநில அரசின் பொறுப்பு அதற்கு உதவ முடியாது என்று கூறியுள்ளனர். இத்தகைய சூழலில், வேளாண்துறையை மாநில அதிகாரப் பட்டியலிலிருந்து பறித்து செல்ல முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழக அரசு மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.