தமிழ்நாடு

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்து விடாதீர்கள்... கமல்ஹாசன்

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்து விடாதீர்கள்... கமல்ஹாசன்

Rasus

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்து விடாதீர்கள் என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீப காலமாக தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து அவ்வப்போது நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தமிழ்நாட்டை தனி நாடாக உடைத்து விடாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம்சாட்டுவதை விடுத்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? என கேட்டுள்ளார்.

அகில இந்தியாவும் தமிழ்நாட்டுக்காக அகிம்சை வழியில் போராடும் என கூறியுள்ள கமல்ஹாசன் இதில் யாரும் உயிரிழக்க மாட்டார்கள் எனவும், அறியாமையில் இருப்பவர்கள் தான் விழித்தெழுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தந்தை பெரியார் குறித்து சும்மா பேசிக் கொண்டிருந்தால் போதாது, செயலில் காட்ட வேண்டும் என சத்யராஜை நடிகர் கமல் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் நடிகர் மாதவனை நோக்கி, தமிழகத்தில் நிலவும் சிக்கலைப் பற்றி பேசுங்கள். உங்கள் கருத்து மாறுபட்டதாக இருந்தாலும் பரவாயில்லை உரக்க பேசுங்கள் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.