தமிழ்நாடு

கொத்து கொத்தாக கரை‌ ஒதுங்கிய டால்பின்கள்

கொத்து கொத்தாக கரை‌ ஒதுங்கிய டால்பின்கள்

rajakannan

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே புன்னங்காயல் மீனவ கிராமத்தில் நேற்று இரவில் திடீரென கூட்டம் கூட்டமாக டால்பின்கள் கரை ஒதுங்கின.

சுமார் 30-க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் உயிருடன் கரை ஒதுங்கியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்களை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் படகில் ஏற்றிச் சென்று விட்டுள்ளனர். ஆனால், சில டான்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. டால்பின்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்ட‌து. 

தகவல் அறிந்து வனத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் அங்கு ‌விரைந்தனர்., டால்பின்கள் இறப்பு குறித்து வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் ஆய்வில் ஈடுபட்டனர். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல், தொடர்ந்து 4 நாள்கள் வரை மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி ஆகிய கடற்கரைப் பகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 

கடலில் ஏற்பட்ட திடீர் அதீத ஒலியால் டால்பின்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என, மத்திய அரசின் கடல் வளத்துறை ஓய்வுபெற்ற விஞ்ஞானி லால் மோகன் தெரிவிக்கிறார். கடலில் மின்காந்த அலைகளின் மாற்றம் காரணமாகவும் கரை ஒதுங்க வாய்ப்பிருக்கிறது. தற்போது கரை ஒதுங்கிய டால்பின் வகை இதற்கு முன் கரை ஒதுங்கியது கிடையாது என்று கூறிய லால் மோகன் கடலில் அதீத ஒலி ஏற்பட்டால் டால்பின்கள் அச்சமடைந்து திசைமாறி பயணிக்கும் என்றார்.

மேலும், உயிரிழந்த டால்பின்களின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கு காரணம் குறித்து தெரியவரும் என்றும் வனத்துறை மருத்துவர் தெரிவித்தார்.