திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை அவரது செல்லப்பிராணி நாய் கடித்து குதறி கொன்றது.
திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். நேற்று மாலை சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இவரது வீட்டிற்குள் நுழைந்தது. அப்பொழுது பெருமாள் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் கொல்லைப்புறத்தில் இருந்துள்ளனர்.
மகள் மட்டுமே வீட்டிற்குள் தனியாக இருந்துள்ளார். பாம்பைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு பெருமாளின் மகள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். மகளிடம் வீட்டிற்குள் பாம்பு நுழைந்திருப்பதை கேட்டு தெரிந்து கொண்ட பெருமாள் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அவரது செல்ல வளர்ப்புப் பிராணியான முனி என்ற நாய் வீட்டுக்குள் ஓடிய பாம்பை கடித்து கொலை செய்தது.
தன்னை வளர்த்தவர்கள் தன் மீது காட்டிய அன்பை காட்டிலும் அவர்கள் மீது வைத்த அன்பு அதிகம் என்பதை செல்லப்பிராணி முனி உணர வைத்து விட்டது. தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல், பாம்புக்கு சற்றும் பயப்படாமல் அதை லாவகமாக கடித்து கொன்றது.