தமிழ்நாடு

கட்சி தொடங்குகிறாரா ரஜினிகாந்த் மனைவி?

Sinekadhara

அரசியலுக்கு வரப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர், தனது தாயார் லதா ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும், ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார். கட்சி துவங்குவதற்கு முன்னதாக தான் நடித்துக்கொண்டிருக்கும் படத்தினை நடித்து முடித்துவிட்டு கட்சியை துவங்கலாம் என்று எண்ணியபோது அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவர்கள் ரஜினிகாந்திடம் ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினர். அதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்து சிறப்பு தரிசனம் செய்தார்.

இதில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் புது கட்சி வெற்றி அடைய வேண்டுமென சிறப்பு பூஜை செய்யப்பட்டு சங்கல்பம் செய்ததாக கூறப்படுகிறது மேலும் நடிகர் ரஜினிகாந்தின் பூரண நலம் பெற வேண்டும் தற்போது எடுக்க கூடிய அனைத்து புது முயற்சியிலும் வெற்றி அடைய வேண்டும் என சங்கல்பம் செய்யப்பட்டது

இன்னும் ஒரு சில நாட்களில் லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.