J&K மாணவர் சங்கம் கண்டனம்
J&K மாணவர் சங்கம் கண்டனம் pt web
தமிழ்நாடு

‘தாடி வளர்க்க கூடாதா?’ - செங்கல்பட்டு நர்சிங் கல்லூரி கட்டுப்பாட்டுக்கு J&K மாணவர் சங்கம் கண்டனம்!

PT WEB

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நர்சிங் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களிடம் தாடி வளர்க்கக் கூடாது என்றும், தாடியை மழித்தால்தான் தேர்வு எழுத அனுமதிப்படுவார்கள் எனவும் கல்லூரி நிர்வாகம் கூறியதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக காஷ்மீர் மாணவர் சங்கத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

காஷ்மீர் மாணவர் சங்கத்தினர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்

அதில், கல்லூரி நிர்வாகத்தின் செயல் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

சமூகத்தில் உள்ள பன்முகத் தன்மை மற்றும் அதன் மீதான மரியாதை குறித்து கேள்வி எழுப்பும் வகையில் இருப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களில் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் மதிப்பு அளிப்பதுடன், அவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள மாணவர்கள், இத்தகைய செயல்களை கண்டிப்பதுடன், உரிய தீர்வு காண வேண்டும் என முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளனர்.