தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல்

webteam

ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விலங்குகள் நல வாரிய உறுப்பினர் அஞ்சலி சர்மா அவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்று தாக்கல் செய்தார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வரலாறு காணாத அறவழி போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் மிருகவதை தடுப்புச் சட்டம் -2017 (தமிழ்நாடு திருத்தம்) சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ள விலங்குகள் நல வாரிய உறுப்பினர் அஞ்சலி சர்மா உச்சநீதிமன்றத்தில் அது தொடர்பான ஆவணங்களை இன்று தாக்கல் செய்தார்.