தமிழ்நாடு

மருத்துவரை தாக்கிய வழக்கறிஞர் - மருத்துவர்கள் சாலை மறியல்

மருத்துவரை தாக்கிய வழக்கறிஞர் - மருத்துவர்கள் சாலை மறியல்

webteam

குளித்தலை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை தாக்கிய வழக்கறிஞர் நீலமேகத்தை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நீலமேகம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது, அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாண்டியனை வழக்கறிஞர் நீலமேகம் மற்றும் உடனிருந்த 8-க்கும் மேற்பட்டோர்  சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மருத்துவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர் நீலமேகம் உள்பட 8 பேரை கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறிய மருத்துவர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் பணியை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.