தமிழ்நாடு

போராடும் மருத்துவர்கள்: தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

போராடும் மருத்துவர்கள்: தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

Rasus

ஆறாவது நாளாக போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவ கூட்டமைப்பினரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ கூட்டமைப்பினர் 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், அரசு மருத்துவ கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். போராடும் அரசு மருத்துவர் கூட்டமைப்பில் 4 அரசு மருத்துவர் சங்கங்கள் உள்ளன.