தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கண், மூக்கு, மூளையில் ஏற்படும் பாதிப்புகளே கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் என்று நாராயணபாபு குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வருவதற்கு முன்பே கருப்பு பூஞ்சை பாதிப்பு இருக்கிறது; இது புதிய நோய் அல்ல என்று கூறியுள்ளார்.
தமிழக அரசின் குழுவிலுள்ள இ.என்.டி வல்லுநர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம், கொரோனா பாதிப்பே உருமாறி கருப்பு பூஞ்சையாக மாறுகிறா என கண்டறிய வேண்டியுள்ளது; கொரோனாவின் முதல் அலையில் யாருக்கும் கருப்பு பூஞ்சை கண்டறியப்படாததால் சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ளார். மேலும், மூக்கடைப்பு, முகத்தில் வலி இருந்தால் அருகிலுள்ள காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரை அணுகலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தி விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 75% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.