மருத்துவர் முரளி
மருத்துவர் முரளி file image
தமிழ்நாடு

நீலகிரி | "என்னை ஒன்றும் செய்ய முடியாது" மதுபோதையில் சிறுமிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்!

PT WEB

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் பொது நல மருத்துவராக இருந்து வருகிறார். இவர் குன்னுர் சாலையில் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கிளினிக்கிற்கு நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சாஹித் என்பவர், தன் மகளுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற மகளோடு சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் இருந்த மருத்துவர் முரளி அத்தோடு அனைவருக்கும் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.

பொது நல மருத்துவர் முரளி

இதனையடுத்து சிறுமியின் தந்தை மருத்துவரிடம், "நீங்கள் ஒரு மருத்துவராக இருந்து கொண்டு மது போதையில் சிகிச்சை அளிக்கலாமா" எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் முரளி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. எங்கு வேண்டுமானாலும் போய் சொல்" என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.

பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை மருத்துவர் முரளி தகாத வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் மருத்துவரைத் தாக்க முயன்றுள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து வைத்து மருத்துவரை காரில் அனுப்பி வைத்தனர்.

மருத்துவரை தாக்க முயன்ற சிறுமியின் உறவினர்கள்

இதனையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.